Thursday, October 17, 2013

மனித உடம்பின் மகத்துவம் பற்றி திருமூலர்

மனித உடம்பின் மகத்துவம் பற்றி திருமூலர்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.   - திருமந்திரம் – 725

உடம்பினை வீண் பொருள்என்றிருந்தேன் அந்து உடம்பினுக்குள் ஒரு பொருளைக் கண்டேன் அவனே இறைவன் என்று உணர்ந்தேன் எனவே இறைவன் இருக்கும் இந்த உடம்பை பாதுகாத்து வந்தேன்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞனாம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.  - திருமந்திரம் – 724
நம் உடலில் உள்ள உயிர் என்ற ஆன்மாவை உணரவேண்டும் என்றால் உடம்பை முறையுடன் பேணி பாதுகாக்க வேண்டும். உடம்பை காக்கும் உபாயத்தை அறிந்து என் உடம்பை வளர்த்து என் உயிரை வளர்த்து வந்தேன்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மனிவிளக்கே.  – திருமந்திரம் – 1823
நம் உள்ளமே கோயிலாம் நம் உடம்பே ஆலயமாம். கொடை உள்ளம் கொண்டோரின் வாயே கோபுர வாசலாம் மெய்ஞானம் உணர்ந்து தெளிந்தாரின் சீவனே சிவனாம். கள்ளமற்ற ஐந்து அறிவுப் பொறிகளும் அழுகுமிக்க செஞ்சுடாராம்.

 

 

No comments:

Post a Comment