Thursday, October 17, 2013

இறைவன் இருக்கும்மிடம் – திருமூலர்,வள்ளலார்

இறைவன் இருக்கும்மிடம் – திருமூலர்,வள்ளலார்

 

பார்வையற்றவன் வெளிச்சத்தில் இருந்தாலும் அது அவனுக்கு இருட்டாகவே தெரியும். முகத்தில் ஒளியற்ற கண்களை உடையவன் எப்படி சூரியனைக் காண முடியாதோ அதேபோல் அகக் கண் இல்லாமல் புறத்தில் உள்ள சூரியனைக் காண முடியாது. இவ்வகக் கண்ணை திருமூலர் அருட்கண் எண்கிறார். அருளே வடிவான பரம்பொருளைக் காண்பதற்கு அருளாகிய கண் அருட்கண் வேண்டும்.
கோடி சூரிய பிராகசம் உள்ள அப்பரம்பொருள் எங்கே இருக்கிறான் என்று திருமூலர் இங்கே கூறுகிறார்.
தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
தேனை உண்ணும் போது வரும் இன்பத்திற்கு கருப்பு சிவப்பு என்று உருவம் கொடுக்க முடியுமா அதுபோல் பேரின்ப மயமான இறைவனுக்கு உருவம் கொடுக்கமுடியாது. சொருபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறியாமை என்கிறார். தேனுக்குள் சுவை இன்பம் இருப்பதுபோல் நம் உடம்புக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்கிறார் திருமூலர்.
இதையே நம் வள்ளல் பெருமான் இப்படி பாடுகிறார்.
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே
திருமூலரும் வள்ளல் பெருமானும் இறைவன் நம் உடலில் இருந்து உள்ளம் வரை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார் என்கிறார்கள்.

 

No comments:

Post a Comment