Thursday, October 17, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்


108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.


பஞ்சபூத தியானம்

பஞ்சபூத தியானம்

 

அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில் குறிப்பிடுவார்கள். அது போல அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் தொண்டனாக யோகம் திகழ்கிறது. உச்சியில், கயிலாய மலைமேல் இருக்கும் பரத்தை அடைய மலையைச் சுற்றிலும் பல வழிகள். எல்லாம் மலைக்கு மேலேதான் சென்று சேருகின்றன. அதைப் போலவே யோகங்களும் பலவிதமாக இருந்தாலும் பயன் ஒன்றுதான். ஏன் அப்படி? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு, ஒன்றைச் சொல்வேன். என்னவென்றால் இறையாற்றலாகிய இயற்கை பலவித பரிமாணங்களில் விரிந்து பரிணமித்திருப்பதால், அதில் எந்த விஷயத்தின் உள்ளே நீங்கள் மனதினால் சங்கமித்தாலும், இறைவனை அடையலாம். எனவேதான் கல்லிலும் கடவுளைக் கண்டு முக்தி அடைந்த ஞானிகளையும் காண்கிறோம். மன ஒருமைப்பாட்டுடன் உலகில் எந்த விஷயத்தைத் தொட்டாலும் இறையாற்றல் உங்களை உறிஞ்சி எடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும். வேதாத்ரியத்தில் பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒரு தவமுறையைக் கற்றுத் தருவார்கள். அதை முறையாகத் தவறாமல் கடைபிடித்து சில இக்கட்டான நேரங்களில் நான் சௌகர்யம் அடைந்திருக்கிறேன். இது என் அனுபவம். இதைப்போல நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும், பிண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களையும் இணைத்து தியானிப்பார்கள். இதை பஞ்சபூத தியானம் (அ) பரந்த தியானம் என்பார்கள். நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களினால் விளையும் உணர்ச்சிகளை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டோமானால், அண்டத்தின் இயற்கை சக்திகளை நம் விருப்பம் போல கையாளலாம். அந்த ஆற்றல் வந்து விடும். அதை அஷ்டமகா சித்தி என்பார்கள். நம் உடலாகிய பிண்டம், அண்டத்தோடு நமது மற்றொரு நுண்ணிய சரீரம் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அதன் மூலமே அண்டத்தின் சக்திகள் நம் ஏழு ஆதாரங்களையும் தூண்டி செயலாற்றச் செய்கிறது. ஸ்தூல உடலில் உள்ள அந்த ஆதாரங்கள் பரு உடலின் நரம்பு மண்டலம் மூலமாக நம் முதுகெலும்பில் உள்ள ஏழு நரம்பு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய தேகத்தில் வெளி ஆகாயத்தையும், பிராண வாயுவில் வெளி வாயுவையும், ஜடராக்கினியில் வெளி அக்னியையும், அப்புவின் அம்சத்தில் நீரையும், பிருதிவி அம்சத்தில் பூமியையும் சேர்த்து தியானிக்க வேண்டும். இவற்றிற்கு முறையே அ – ய – ர – வ – ல என்ற மந்திர அட்சரங்களை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும். அதாவது, பாதம் முதல் முழங்கால் வரை – பிருதிவி ஸ்தானம்.
முழங்காலுக்கு மேல் இடுப்பு வரை – நீர் ஸ்தானம்.
இடுப்புக்கு மேல் இருதயம் வரை – அக்னி ஸ்தானம்.
இருதயத்திலிருந்து புருவ நடு வரை – வாயு ஸ்தானம்.
அதிலிருந்து சிரசு உச்சி வரை – ஆகாய ஸ்தானம்.
இனி நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்கள் சுவாசத்தை பிருதிவி ஸ்தானத்தில் நிறத்தி ‘லம்’ என்ற கந்த பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்தில் இருக்க வேண்டும். இது நம் பிருதிவி அம்சத்தை பூமியோடு இணைக்கும் மூலாதார தியானமாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் மண்ணுக்குள் நாட்கணக்கில் இருந்தாலும் மரணம் சம்பவிக்காது. உடலுக்கோ உயிருக்கோ மண்ணால் எந்த சேதாரமும் ஏற்படாது.
சுவாசத்தை நீர் ஸ்தானத்தில் நிறுத்தி ‘வம்’ என்ற பீஜ அக்ஷரத்தை ஜபித்தபடி தினமும் இரண்டு மணி நேரம் தியானித்திட, நீரில் மிதக்கும் சித்தி கிடைக்கும். கடலுக்குள் சஞ்சரிக்கும் சித்தியைத் தரும். இந்தியானத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு நீரால் மரணம் ஏற்படாது.
சுவாசத்தை அக்னி ஸ்தானத்தில் நிறுத்தி ‘ரம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணிநேரம் தியானம் செய்ய வேண்டும். இதில் வெற்றி அடைந்தவர்களை நெருப்பு சுடாது. அக்கினியால் மரணம் ஏற்படாது.
சுவாசத்தை வாயு ஸ்தானத்தில் நிறுத்தி ‘யம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானிக்க வேண்டும். இதில் வெற்றியடைந்தவர்களுக்கு வாயு வேகம், மனோ வேகம் பெற்று எங்கும் சஞ்சாரம் செய்யும் சித்தி கிட்டும். இவர்களுக்கு வாயுவால் மரணம் ஏற்படாது.
அடுத்து சுவாசத்தை ஆகாய ஸ்தானத்தில் நிறுத்தி ‘அம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்து, சாதனையில் வெற்றி அடைந்தவர்களுக்கு ககன மார்க்கத்தில் சஞ்சரிக்கும் சித்தி கிட்டும். இவர்களுக்கு ஆகாயத் தத்துவத்தால் மரணம் ஏற்படாது. இந்த பஞ்சபூதத் தியானத்தில், அல்லது பரந்த தியானத்தில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அது என்ன வென்றால் மனிதனுக்கு மரணம் பஞ்சபூதங்கள் வாயிலாகவே நடைபெற்றாக வேண்டும். அவற்றை ஒருவர் வென்று விட்டால் அவரை மரணம் தீண்ட முடியாதல்லவா ? இதில் வென்றவர்கள் மரணத்தை வெல்லலாம். தன் சரீரத்தை காற்றில் கரைக்கலாம். மீண்டும் சேர்த்து உருவமாகலாம். நம் சித்தர்கள் இந்த உபாயத்தைக் கைகொண்டுதான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இமயத்தில தவத்தில் இருக்கிறார்கள். அவர்களை போகர் இமயத்தில் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது. அவரது பாடல்களில் உள்ளது. நம் தமிழகம் செய்த பெரும் பேற்றினால், நமக்குக் கிடைத்த மகா ஞானியும், சன்மார்க்க யோகியுமான அருள் பிரகாச இராமலிங்க அடிகளார் அவர்கள் இந்த முறையைக் கையாண்டுதான் காற்றில் கரைந்து ஒளியாகத் திகழ்கிறார். எனவே வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் ஒழுகி அவர் வழியில் நாமும் சென்று உலகுக்கு ஒளியாகத் திகழ்வோமாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

 

மனித உடம்பின் மகத்துவம் பற்றி திருமூலர்

மனித உடம்பின் மகத்துவம் பற்றி திருமூலர்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.   - திருமந்திரம் – 725

உடம்பினை வீண் பொருள்என்றிருந்தேன் அந்து உடம்பினுக்குள் ஒரு பொருளைக் கண்டேன் அவனே இறைவன் என்று உணர்ந்தேன் எனவே இறைவன் இருக்கும் இந்த உடம்பை பாதுகாத்து வந்தேன்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞனாம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.  - திருமந்திரம் – 724
நம் உடலில் உள்ள உயிர் என்ற ஆன்மாவை உணரவேண்டும் என்றால் உடம்பை முறையுடன் பேணி பாதுகாக்க வேண்டும். உடம்பை காக்கும் உபாயத்தை அறிந்து என் உடம்பை வளர்த்து என் உயிரை வளர்த்து வந்தேன்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மனிவிளக்கே.  – திருமந்திரம் – 1823
நம் உள்ளமே கோயிலாம் நம் உடம்பே ஆலயமாம். கொடை உள்ளம் கொண்டோரின் வாயே கோபுர வாசலாம் மெய்ஞானம் உணர்ந்து தெளிந்தாரின் சீவனே சிவனாம். கள்ளமற்ற ஐந்து அறிவுப் பொறிகளும் அழுகுமிக்க செஞ்சுடாராம்.

 

 

மூட்டு வர்மம் – போகர்

மூட்டு வர்மம் – போகர்

 

வாய்கியந்தக் கரமதில் மூட்டு வர்மம்
மகத்தான் அடியிடிகள் கொண்டு தானால்
தாங்கியந்தக் கரமதிலே கூச்சமாகித்
தயவாக விருவிருந்து நொந்து வீங்கும்
மாங்குசத்தில் ரத்தமயம் மாற லாகும்
மகிமையான வல்லாரை பிழிந்து தாக்கு
நீங்குமடா தடவிமெள்ள நெட்டி வாங்கி
நிரணயமாய் உள்ளுக்கும் கொடத்தி டாயே -  (போர் வர்மசூத்திரம் 67)
மூட்டில் தாக்கப்பட்ட இடத்தை குணப்படுத்தும் விதத்தை மூட்டு வர்மம் மூலம் போகர் சித்த பெருமான் விளக்குகிறார்.
கையி முட்டியில் ஏற்படுவது மூட்டு வர்மமாகும் மூட்டில் அடிஇடிகள் கொண்டால் கையில் கூச்சமாகி விருவிரு என்று ஆகி வீக்கமும் உண்டாகும். தசையில் உள்ள இரத்ததின் நிறமும் குணமும் மாறிவிடும். வல்லாரையைப் பிழிந்து மேலே பூசி சொடுக்கு எடுக்கு குணம் அடையும் என்கிறார்.
நிரணயமாய் உள்ளபக்கும் கொடத்தி டாயே. - இதற்கு என்வேன்று அர்த்தம் சிரியாக தெரியவில்லை – வள்ளாரை சாறை சப்பிடவேண்டு என்கிறாரோ.

 

இறைவன் இருக்கும்மிடம் – திருமூலர்,வள்ளலார்

இறைவன் இருக்கும்மிடம் – திருமூலர்,வள்ளலார்

 

பார்வையற்றவன் வெளிச்சத்தில் இருந்தாலும் அது அவனுக்கு இருட்டாகவே தெரியும். முகத்தில் ஒளியற்ற கண்களை உடையவன் எப்படி சூரியனைக் காண முடியாதோ அதேபோல் அகக் கண் இல்லாமல் புறத்தில் உள்ள சூரியனைக் காண முடியாது. இவ்வகக் கண்ணை திருமூலர் அருட்கண் எண்கிறார். அருளே வடிவான பரம்பொருளைக் காண்பதற்கு அருளாகிய கண் அருட்கண் வேண்டும்.
கோடி சூரிய பிராகசம் உள்ள அப்பரம்பொருள் எங்கே இருக்கிறான் என்று திருமூலர் இங்கே கூறுகிறார்.
தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
தேனை உண்ணும் போது வரும் இன்பத்திற்கு கருப்பு சிவப்பு என்று உருவம் கொடுக்க முடியுமா அதுபோல் பேரின்ப மயமான இறைவனுக்கு உருவம் கொடுக்கமுடியாது. சொருபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறியாமை என்கிறார். தேனுக்குள் சுவை இன்பம் இருப்பதுபோல் நம் உடம்புக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்கிறார் திருமூலர்.
இதையே நம் வள்ளல் பெருமான் இப்படி பாடுகிறார்.
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே
திருமூலரும் வள்ளல் பெருமானும் இறைவன் நம் உடலில் இருந்து உள்ளம் வரை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார் என்கிறார்கள்.

 

புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி


புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி



அனைவருக்கும் பழனி கோவில் தெரியும் அந்த மலை அடிவாரத்தில்தான் புலிப்பாணி சித்தரின் ஜீவசாமதி இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். மலைக்குமேல் வீற்றிருக்கும் தண்டாயுதபானி என்ற மூலிகை சிலையை உருவாக்கியவர் போகர்.
அந்த சிலை உருவாக பெரும் உதவியாக இருந்தவர்கள் புலிப்பாணி மற்றும் கோரக்க சித்தர். பழனிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் இந்த ஜிவசாமாதியை பார்த்துவிட்டு வருவது மிகவும் நல்லது. பழனி மலை ஏறும் இடத்திலிருந்து இடது புறமாக ஒரு 15ந்து கடை தள்ளி புலிப்பாணி சித்தரின் ஜீவசாமாதி அமைந்துள்ளது.
இந்த தண்டாயுதபாணி சிலையை போகரின் கடைசி காலக்கட்டதில் செய்யப்பட்டது (அதாவது போகர் ஜீவசமாதி ஆவதற்கு சிறுதுகாலம் முன்) போகருக்கு 80 சீடர்கள் இருந்ததாகவும் அவர்கள் தண்டாயுதபாணி சிலையை வடிவமைக்க உதவியதாகவும் சொல்லப்படுகிறது அதில் பிரதான சீடர்கள் புலிப்பாணி மற்றும் கோரக்கர்.
சிலை செய்தபிறகு, போகர் தான் ஜீவசமாதி அடைபோவாதாக கூறி புலிப்பாணிக்கு பழனி தண்டாயுதபாணியை பராமரிக்கும் பொருப்பையும், கோரக்கரை வடக்குப்பொய்கைநல்லூரில் ஜீவசமாதி அடையுமாறு கேட்டுக்கொண்டார். இந்த விவரங்களை சந்திரேகை என்ற நூலில் கோரக்கர் விவரமாக கூறியிருக்கிறார். அதை இனிவரும் பதிவிகளில் எழுத முயற்ச்சிக்கிறேன்.

பாம்பன் சுவாமிகள் – உண்மை கதை

பாம்பன் சுவாமிகள் – உண்மை கதை

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார். அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம் ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர். பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார். மயூர வாகன சேவன விழா: முருகன் மீது சண்முக கவசம் உள்ளிட்ட 6666 பாடல்களைப் பாடிய அருளாளர் பாம்பன்சுவாமி. 1923, டிச.27ல் சென்னை தம்புச் செட்டித்தெருவில் குதிரை வண்டி மோதியதால் சுவாமியின் இடதுகால் முறிந்து போனது. அரசு மருத்துவமனை மன்றோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது 73 என்பதாலும், உப்பு சேர்க்காமல் உணவு உண்பவர் என்பதாலும், குணமாவது சிரமம் என்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர். பாம்பன் சுவாமி தான் பாடிய சண்முககவசத்தை பாராயணம் செய்தபடியே இருந்தார். 1924, ஜனவரி 6 இரவில், மருத்துவமனையில் சேர்ந்த 11வது நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் தோகை விரித்தபடி இருமயில்கள் ஆடுவதை சுவாமி கண்டார். இன்னும் 15 நாளில் குணமாகும் என்று அசரீரி ஒலித்தது. குழந்தை வடிவ முருகனும் சுவாமிக்கு காட்சியளித்தார். அதன்படி பூரணகுணமும் பெற்றார். சென்னை அரசு மருத்துவமனை 11வது வார்டு பதிவுக்கல்லில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியில், ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையன்று, மயூரவாகன சேவன விழாவை வாக மகா தேஜோ மண்டல சபையினர் நடத்துவர். அப்போது சுவாமி எழுதிய, அசோக சாலவாசத்தை வாசிப்பர். இதில் அவரின் தெய்வீக அனுபவம் இடம் பெற்றுள்ளது.